கலைகளுள் ஈழக்கலைகளுக்கும் என்று ஒரு தனி அடையாளம் தேடியும், இன்னமும் எஞ்சிப்போயுள்ள எமது கலாசார விழுமியங்களை அழியவிடாது பாதுகாத்துவரும் படைப்பாளிகளுடன் ntpictures ம் இணைந்து செயலாற்றிவருவது எமக்குப் பெரு மகிழ்ச்சியே. ntpictures 2001ல் ஒரு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட குறும்படங்களையும், நான்கு முழு நீளத் திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அத்துடன் எம்மவர் பாடல்களையும் காட்சிப்படுத்தி வெளியிட்டிருப்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். தற்போதும் சில தயாரிப்புக்களில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம். ntpictures உடன் இணைந்து செயல்பட விரும்பும் அனைத்து திரைப்பட ஆர்வலர்களையும் ntpictures நேசக்கரம் கொண்டு வரவேற்கிறதென்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.


நன்றி
ntpictures