• தயாரிப்பில்

  முழு நீளத்திரைப்படம்

  9C OslO.

 •  

  மம மாலினி குறும்படம்

  ஆழ்க்கடத்தும் தரகர்களால் கைவிடப்பட்ட

  இளம் பெண்ணின் கதை

  காட்சிப் படங்கள்

 • தொலைக் காட்சித்தொடர்

  நேசங்கள் என்னும் தொடர் 12 நாடகளில் படமாக்கப்பட்டது.

  நோர்வேயில் நடக்கும் காட்சிகளை ntpictures படமாக்கியுள்ளது

  காட்சிப் படங்கள் விபரங்கள்

 • மீண்டும்

  மீண்டும் என்னும் முழுநீளப் திரைப்படம்

  2010 ம் ஆண்டில் திரையிடப்பட்டது

  காட்சிப் படங்கள்

ஈழத்தமிழரும் சினிமாவும்

ஈழத்தின் முதலாவது தமிழ் படமான `சமுதாயம்` ஒரு சிங்களவரால் தயாரிக்கப்பட்டது என்ற செய்தி பலருக்குத் தெரியாமல் இருக்கும். அதேபோல ஈழத்தின் முதலாவது சிங்களப் படம் தொழில் அதிபர் எஸ்.எம்.நாயகம் என்ற தமிழரால் தயாரிக்கப்பட்டது. இது ஈழத்து தமிழ் சினிமாவின் வரலாறு

என்ற ஐ.தேவதாஸ் அவர்களால் எழுதப்பட்ட நீண்ட நூலில் பதியப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி மஜெஸ்டிக் ஹோட்டல் மாடியில் தேவதாசினால், நொடிந்து போயிருந்த தமிழ் சினிமாவுக்கு உரம்கொடுக்குமுகமாக ஒரு படம் தயாரிக்க அவர் நிறுவனமொன்றை உருவாக்க விழைந்தபோது ஐயாயிரம் ரூபாவுக்கு ஐந்து பங்குகளை வாங்கியது ஞாபகத்துக்கு வருகிறது. சந்திரிகா அம்மையாரினால்  இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் ஒரு டைரக்டராக நியமிக்கப்பட்ட அவர் அடுத்து வந்த அரசினால் பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்டு சிறையில் பல காலம் வாடியது ஒரு சோகக் கதை.

ஈழத்து தமிழ் சினிமா இப்பொழுதுதான் கட்டியெழுபப்பட வேண்டிய புது விடயமல்ல. உண்மையில் அது உயர்ந்த நிலையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகழுக்கு முன்னரே இருந்தது. முதலில் பரீட்சார்த்த நிலையில் திரைப்படப்பிடிப்பாளர்களால் எடுத்து பனைமரங்கள் எரிந்து கொண்டிருப்பது போன்ற காட்சி நிலைகளை எல்லாம் கடந்து யதார்த்தமான நல்ல தமிழ் படங்கள் பல அப்போதே வரத் தொடங்கின. காவலூர் இராசதுரை அவர்களின் முயற்சியில் பதிராஜவின்  நெறியாழ்கையில் சில்லையூர் செல்வராஜன்,கமலினி நடித்த `பொன்மணி`, செங்கை ஆழியானின் மூலக்கதையில் நெடுந்தீவில் எடுக்கப்பட்ட `வாடைக்காற்று`, சிறிது கால இடைவெளியின் பின்னர் வெளி வந்த, கட்டிடக் கலைஞர் துரைராஜா அவர்கள் தயாரித்து நமசிவாயம்(ஜெயகாந்த்), லீலா நாராயனன், சின்னையா போன்றோர் நடித்தளித்த `குத்துவிளக்கு` போன்ற படங்கள் வந்த நிலையில் 83இன் தமிழின அழிப்பு ஈழத் தமிழ் படங்களையும் அழித்தொழித்தது.

யப்பானின் அக்கிரா குரொசோவின் `ரசோமன்`, இரானிய மஜீத் மஜீதியின் `சுவர்க்கத்தின் குழந்தைகள்`, வங்காளத்தின் சத்யஜித்ராயின் `பதர் பஞ்சலி`, மலையாலத்தின் அடூர் கோபாலகிரிஸ்ணனின், `எலிபாதயம்`, கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகத்தின் அரங்கக் கற்கை நெறியில் எனது சினிமா இரசனை விரிவுரையாளராக இருந்த லெஸ்டெர் ஜேம்ஸ் பீரிசின் `கம்பெரலிய` போன்ற படங்களின் தரத்தில் அமையாவிட்டாலும், யதார்தப் பண்புகள்கொண்ட படங்களாக இவை அமைந்திருந்தன. நல்ல திரைப்பட இரசனையை வளர்க்க மேற்கூறிய, குறைந்த செலவிலும் எடுக்கப்பட்ட, படங்களைப்பார்ப்பது உதவும். ஆண்மையில் வெளிவந்த, (முன்னைய என் குறும்திரைப்படமான, இனி எனினுமின் படப்பிடிப்பாளர்) மது அம்பத்தின் படப்பிடிப்பில் மீண்டுமொருமுறை அவருக்கு ஜனாதிபதி பரிசினைப்பெற்றுக்கொடுத்த மலையாளப்படமான `ஆதாமிண்டமகன் அபூ`, `தென் கொரியப்படமான ‘The way Home’ போன்றவை பார்க்கவேண்டிய நல்ல படங்கள்.

சென்ற ஆண்டு வெளிவந்த ‘A gun and a ring’(Canada),அண்மையில் வெளி வந்த திகில்படவகை (Genre) ‘9C Oslo’ (Norway), சற்று முயற்சியுடன் இன்னும் நல்ல படங்களை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் படைப்பார்கள் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. இவை குறைந்த செலவில் தரமான படங்களைப்படைக்க கொலிவுட் படைப்பாளிகளுக்கு உதாரணமாக போட்டுக்காட்டப்படவேண்டும்.

9C Oslo சம்பந்தப்பட்ட யாவர்க்கும், முக்கியமாக இளம் நடிக, நடிகையர்க்கு என் வாழ்த்துக்கள்.

-திருமலை கா.சிவபாலன் (ஒசுலோவிலிருந்து).